Otteri Selvakumar Tamil Poem # 12
O
0
Altın Yaprak
பூனைகள் ஜாக்கிரதை
எல்லா பூனைகளும்
திருட்டு
பூனைகள்தான்
வீட்டிலும் சரி
தெருவிலும் சரி
வீட்டில் பால்
திருடும் பூனைகள்
ஜாஸ்தி...
தெருவில் எலி தேடும்
பூனைகள்
ஜாஸ்தி...
மனிதர்களிலும் நிறைய
பூனைகள் உண்டு
மத பூனைகள்...
சாதி பூனைகள்...
ஊழல் பூனைகள்...
இப்படி இன்னும்
பல பல பூனைகள்
மக்களை எலிகளாக பாவித்து
அனு தினமும் கடித்து
காரி துப்புகிறது
கண்டபடி....
என்ன செய்ய?
எலிகளை விட பூனைகள்
பலமாய் இருக்கிறது
அதேத் சமயம்
அழகாய் இருக்கிறது...
Bu şiiri puanla
Henüz puan verilmemiş